/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பர்மிட் பெற்றும் புதிய மினி பஸ்கள் இயக்குவதில் சிக்கல் விண்ணப்பதாரர்கள் தவிப்பு
/
பர்மிட் பெற்றும் புதிய மினி பஸ்கள் இயக்குவதில் சிக்கல் விண்ணப்பதாரர்கள் தவிப்பு
பர்மிட் பெற்றும் புதிய மினி பஸ்கள் இயக்குவதில் சிக்கல் விண்ணப்பதாரர்கள் தவிப்பு
பர்மிட் பெற்றும் புதிய மினி பஸ்கள் இயக்குவதில் சிக்கல் விண்ணப்பதாரர்கள் தவிப்பு
ADDED : ஏப் 19, 2025 03:14 AM
அன்னுார்: 'புதிதாக மினி பஸ் இயக்க பர்மிட் பெற்றவர்களிடம் வேறு மாநில பஸ்களை இயக்கக் கூடாது' என தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்வதற்காக திருத்தப்பட்ட விதிமுறைகளுடன் மினி பஸ் இயக்க வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. 2000 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அழைப்பு விடுத்தது. இதில் 1,200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 25 இருக்கைகளுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதன்படி பலரும் உள்ளூரில் பழைய மினி பஸ்கள் இல்லாததால், வெளிமாநிலங்களுக்குச் சென்று அங்கு மினி பஸ்களை வாங்கி இங்கு கொண்டு வந்து அனைத்து வசதிகளும் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
வருகிற மே 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மினி பஸ் இயக்கத்தை துவக்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மினி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி.
வேறு மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டு விண்ணப்பித்த மினி பஸ்களுக்கு அனுமதி இல்லை என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 21 பர்மிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
பல லட்சம் ரூபாய் செலவழித்து வெளி மாநிலத்தில் மினி பஸ் வாங்கி வந்தும் பர்மிட் பெற்றும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறுகையில், 'விண்ணப்பிக்கும் போது அதிகாரிகள் வெளிமாநிலத்தில் மினிபஸ் கொள்முதல் செய்தாலும் இங்கு மாற்றி இயக்கிக் கொள்ளலாம் என்றனர். அந்த உறுதியின் அடிப்படையில் வெளிமாநிலத்தில் மினி பஸ் கொள்முதல் செய்து வந்தோம். பல லட்சம் ரூபாய் செலவழித்த பிறகு தற்போது மாற்ற முடியாது. தமிழகத்தை சேர்ந்த மினி பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.
அரசு உடனடியாக இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

