/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: தேசிய அட்டைக்கு விண்ணப்பிப்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: தேசிய அட்டைக்கு விண்ணப்பிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: தேசிய அட்டைக்கு விண்ணப்பிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: தேசிய அட்டைக்கு விண்ணப்பிப்பு
ADDED : மார் 01, 2024 10:48 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தேசிய தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பு பணி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்து வருகிறது.
கணக்கெடுப்பில் விடுபட்டோருக்காக, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.அவ்வகையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின், திட்ட அலுவலர் சுந்தரேஷ்வரன் தலைமையில் முகாம் நடத்தப்பட்டது.
முகாமில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்கள், மாநில அரசின் அடையாள அட்டை, மருத்துவ சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை உள்ளிட்டக்கி, பதிவு செய்தனர்.
தேசிய தனித்துவ அடையாள அட்டையைப் பயன்படுத்தி, மத்திய அரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.
முகாமில் பங்கேற்க இயலாத மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என, தெரிவிக்கப்பட்டது.

