/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்
/
நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்
நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்
நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து கேட்டு இரு கல்லுாரிகள் விண்ணப்பம்
ADDED : ஜன 30, 2024 12:15 AM
கோவை;கோவையில் நிகர்நிலை அந்தஸ்து பெறுவதற்காக, இரண்டு தனியார் கல்லுாரிகள் பாரதியார் பல்கலையில் தடையின்மை சான்று கோரி, விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளன.
புதிய கல்விக்கொள்கையின் படி, ஆர்வமுள்ள கல்லுாரிகள் நிகர்நிலை பல்கலைகளாக மாற விதிமுறையில் இடம் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி, தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் சில அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் தயார் நிலையில் உள்ளன.
நிகர்நிலை பல்கலைகளாக மாறுவதற்கு குறிப்பிட்ட கிரேடு பெற்று இருக்கவேண்டும், இடப்பரப்பளவு, பிற கட்டமைப்பு வசதிகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையை சேர்ந்த இரண்டு கல்லுாரிகள், மாநில அரசின் அனுமதி பெற்று, நிகர்நிலை பல்கலையாக மாறுவதற்கான செயல்பாடுகளை துவக்கியுள்ளதாக, பல்கலை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.