/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வரின் இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
/
முதல்வரின் இளைஞர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 14, 2025 04:35 AM
கோவை : முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு, வரும் மே 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை, அங்கீகரிக்கும் வகையில் 'முதல்வரின் மாநில இளைஞர் விருது' ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று, 15-35 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் தலா மூவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள், சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு, அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் பணிபுரிபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இணையதளம் மூலம் வரும் மே 3ம் தேதி மாலை, 4:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.