தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊர்க்காவல் படை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊர்க்காவல் படை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊர்க்காவல் படை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : அக் 18, 2026 06:36 PM

ADDED : அக் 18, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:36 PM ADDED : அக் 18, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு, 2 பெண் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட, 59 ஆண் ஊர்க்காவல் படையினருக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இம்மாதம், 23ம் தேதி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இம்மாதம், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வயது வரம்பு, அக்.,1, 2026ம் தேதி, 18 வயது பூர்த்தியானவராகவும், 50 வயதுக்குள்ளும், நல்ல உடல் தகுதி, நன்னடத்தை உடையவராகவும், குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். கல்வி தகுதிக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வசிப்பிட முகவரிக்கான அத்தாட்சி மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும்,கோவை மாவட்ட காவல் துறையின் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் குடியிருப்பவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் தெரிவிக்க வேண்டும்.மத்திய, மாநில அரசு ஊழியராகவோ, சுய வேலை பார்ப்பவராகவோ அல்லது நல்ல நிறுவனத்தில் பணி புரிபவர்களாக இருப்பினும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us