/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்புக்கு விண்ணப்பித்து.. காத்திருப்பு . பல மாதங்களாக விவசாயிகள் தவிப்பு
/
மின் இணைப்புக்கு விண்ணப்பித்து.. காத்திருப்பு . பல மாதங்களாக விவசாயிகள் தவிப்பு
மின் இணைப்புக்கு விண்ணப்பித்து.. காத்திருப்பு . பல மாதங்களாக விவசாயிகள் தவிப்பு
மின் இணைப்புக்கு விண்ணப்பித்து.. காத்திருப்பு . பல மாதங்களாக விவசாயிகள் தவிப்பு
ADDED : டிச 17, 2025 05:11 AM

அன்னூர், 'தட்கல்' திட்டத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும், இணைப்பு கிடைக்காமல் பல மாதங்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அன்னூர் தாலுகாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் இலவச மின் இணைப்புக்காக அரசிடம் விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 'தட்கல்' திட்டத்தில், ஐந்து எச்.பி., 7.5 எச்.பி., 10 எச்.பி., திறனுள்ள மின் மோட்டார்களை இயக்குவதற்கான விவசாய மின் இணைப்பு பெற, 'தட்கல்' திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், 10 எச்.பி., திறன் மின் இணைப்புக்கு, மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். கரியாம்பாளையம், கணேசபுரம் பகுதியில் இந்தத் திட்டத்தில் பல விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
போர்வெல், அடங்கல் உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் இணைத்துள்ளனர். விண்ணப்பித்து எட்டு மாதங்கள் ஆகியும், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. விவசாயிகள் கூறுகையில், 'சாதாரண முறையில் விண்ணப்பித்து, பல ஆண்டுகள் ஆகியும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே மூன்று லட்சம் ரூபாய் செலுத்த முன்வந்தும், 8 மாதங்களாக காத்திருக்கிறோம்.
தட்கல் திட்டத்திலும் விவசாய மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அத்திக்கடவு திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. இதை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளோம். ஆனாலும் மின் இணைப்பு கிடைக்காததால் தவிக்கிறோம்' என்றனர்.

