/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு
/
நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு
ADDED : நவ 28, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி திவ்யா, தேர்வு செய்யப்பட்டு, நகராட்சி தலைவர் அறிவரசு முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி ஆணையர் பூவேந்திரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் முன்னிலையில், செயல் அலுவலர் சீனிவாசன் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஹரிகுமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

