ADDED : மே 19, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.,வில் கிளை, ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிவடைந்தது. இதையடுத்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ., அன்னுார் தெற்கு ஒன்றிய பார்வையாளராக ராஜராஜசாமியும், வடக்கு ஒன்றிய பார்வையாளராக ரத்தினசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன் நியமனம் செய்துள்ளதாக கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.