/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய சமையல் எண்ணெய் திட்டத்துக்கு ஒப்புதல்; மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதீய கிசான் சங்கம் வரவேற்பு
/
தேசிய சமையல் எண்ணெய் திட்டத்துக்கு ஒப்புதல்; மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதீய கிசான் சங்கம் வரவேற்பு
தேசிய சமையல் எண்ணெய் திட்டத்துக்கு ஒப்புதல்; மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதீய கிசான் சங்கம் வரவேற்பு
தேசிய சமையல் எண்ணெய் திட்டத்துக்கு ஒப்புதல்; மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதீய கிசான் சங்கம் வரவேற்பு
ADDED : அக் 13, 2024 10:34 PM
கோவை: தேசிய எண்ணெய் வித்து திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை, பாரதீய கிசான் சங்கம் வரவேற்றுள்ளது.
இச்சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைய, தேசிய எண்ணெய் வித்து திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2030-31 வரையிலான ஏழு ஆண்டுகளில், தேசிய சமையல் எண்ணெய் திட்டம் (என்.எம்.இ.ஓ.,) ரூ.10,103 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
கடுகு, நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி, எள் உள்ளிட்ட முதன்மை எண்ணெய் வித்துப் பயிர்கள் ஊக்குவிக்கப்படும். பருத்தி விதை, அரிசி, தவிடு போன்ற இரண்டாம் நிலை எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் சேகரிப்பு மற்றும் பிரித்தெடுக்கும் திறனை அதிகரிக்க கவனம் செலுத்தப்படும்.
வரும், 2031க்குள் முதன்மை எண்ணெய் வித்து உற்பத்தியை, 3.9 கோடி டன்னில் இருந்து, 6.97 கோடி டன்னாகவும், சமையல் எண்ணெய் உற்பத்தியை, 2.54 கோடி டன்களாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்து சாகுபடியை மேலும், 40 லட்சம் எக்டர்களுக்கு விரிவுபடுத்துதல், பொதுத்துறையில் 65 புதிய விதை மையங்கள், 50 விதை சேமிப்பு அலகுகள், 347 மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட மதிப்பு சங்கிலிக் குழுக்கள் உருவாக்குதல், உயர்தர விதைகள், சிறந்த விவசாய நடைமுறைகள் உட்பட அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் வாயிலாக இதனைச் சாத்தியப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தத்தேவையில், 57 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க, சமையல் எண்ணெய்களுக்கு 20 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளால், எண்ணெய் இறக்குமதி குறைந்து, அந்நிய செலாவணி பாதுகாக்கப்படும். சாகுபடி ஊக்குவிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். இந்நடவடிக்கை மேற்கொண்டதற்காக, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.