/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்
/
ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்
ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்
ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்
ADDED : பிப் 17, 2024 05:34 AM

புதுடில்லி : ராணுவத்துக்கு தேவையான, ரூ.84,560 கோடி மதிப்புள்ள பல்வேறு தளவாட பொருட்களை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் அனுமதியளித்துள்ளது.
நம் நாட்டு ராணுவத்தை மேலும் பலப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. அதேசமயம், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவிலேயே பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்க, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இயங்கும் ராணுவ கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதல் அவசியம்.
இதன்படி, நம் நாட்டு ராணுவத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 84,560 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ராணுவ தளவாடங்களை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.