sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்

/

துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்

துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்

துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்


ADDED : செப் 17, 2025 09:51 PM

Google News

ADDED : செப் 17, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் ; துடியலூரில் அரவான் பண்டிகை இம்மாதம், 22ம் தேதி துவங்குகிறது.

அன்று காலை, 6:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் பூஜை நடக்கிறது. 23ம் தேதி மாலை, 4:30 மணிக்கு பொங்காளியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல் நடக்கிறது.

7:00 மணிக்கு தலைவர் வேலுசாமி இல்லத்தில் பூஜை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மங்கையம்மன் பூச்சாட்டுதல், 9:00 மணிக்கு பூசாரி ரங்கசாமி இல்லத்தில் அணி கூடை பூஜை, இரவு, 10:00 மணிக்கு அரவான் சுவாமிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது.

தொடர்ந்து, 30ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் அக்., 1ம் தேதி மங்கையம்மன் பொங்கல் திருவிழா, 7ம் தேதி அரவான் மலைக்கு செல்லுதல், 8ம் தேதி அரவான் சுவாமியை எதிர்கொண்டு அழைத்தல், நடக்கிறது.

9ம் தேதி காலை மஞ்சள் நீராடுதல், இரவு 9:00 மணிக்கு அரவான் சுவாமியை ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டுபிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

10ம் தேதி காலை அரவான் அலங்கார பூஜை, அரவான் திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு பொங்காளியம்மன் கட்டு சாதம் எடுத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு அரவான் களப்பலி மேடை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

11ம் தேதி பொங்காளி அம்மன் கோவிலில் இருந்து இரவு ஸ்ரீ ராமர் பட ஊர்வலம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரவான் கோவில் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us