/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வில்வித்தை பயிற்சியாளர் கைது
/
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வில்வித்தை பயிற்சியாளர் கைது
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வில்வித்தை பயிற்சியாளர் கைது
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வில்வித்தை பயிற்சியாளர் கைது
ADDED : நவ 24, 2025 06:38 AM

கோவை: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வில்வித்தை பயிற்சியாளரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி மஹாராணி அவென்யூவை சேர்ந்தவர் கிஷோர்குமார், 35. வில்வித்தை பயிற்சியாளர். உலியம்பாளையம் பகுதியில் வில்வித்தை பயிற்சி மையம் நடத்தி வந்தார். இவரிடம் கடந்த, 2022ம் ஆண்டு கோவையை சேர்ந்த, 13 வயது சிறுமி ஒருவர் பயிற்சிக்காக சேர்ந்தார்.
அப்போது, சிறுமிக்கு, கிஷோர்குமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். அச்சமடைந்த அச்சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறவில்லை. இந் நிலையில் கடந்த, 8ம் தேதி சென்னையில் நடந்த வில்வித்தை போட்டியில் சிறுமி பங் கேற்றார்.
அப்போட்டிக்கு, கிஷோர்குமாரும் வந்திருந்தார். இந்நிலையில் அவரை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அப்போது, சிறுமி பெற்றோரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த கிஷோர் குமாரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரி வித்தார்.
இதுகுறித்து பெற்றோர் கோவை மேற்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி கிஷோர்குமாரை கைது செய்தனர்.

