UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
கோவை: அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (நவ.,1ம் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டங்களுக்கு அதிகாரிகள் குறித்த நேரத்தில் வருவதில்லை என்று புகார் தொடர்ந்து வருகிறது. மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் இதுபற்றி மீண்டும் புகார் தெரிவித்தனர்.
அன்னூர் தாலுகாவில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை என்றும், கூட்டங்களில் நிறைவேற்றும் தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வராமல் காகித அளவிலேயே இருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் கூறுகையில், ‘கிராம சபை கூட்டங்களில் உள்ள குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டினாலும், அப்போதைக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை’ என்றார்.
