/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடக்கு குறுமைய தடகளத்தில் 'நீயா...நானா'
/
வடக்கு குறுமைய தடகளத்தில் 'நீயா...நானா'
ADDED : செப் 10, 2025 10:27 PM

கோவை; வடக்கு குறு மைய தடகள போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் இரு நாட்கள் நடந்தன. இதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு, 3,000 மீ., ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான, 100மீ., 200மீ., ஓட்டத்தில் மாணவி மதுஸ்ரீ, குண்டு எறிதல், வட்டு எறிதலில் மாணவி ஜோதி லட்சுமி, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 800 மீ., 1,500 மீ., 3,000மீ., ஓட்டத்தில் மாணவி ஹரிணிஸ்ரீ, 100 மீ., 200 மீ., நீளம் தாண்டு தலில் மாணவி பிரவீனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
19 வயதுக்கு உட்பட்டோர், 100மீ., 200 மீ., ஓட்டத்தில் மாணவி ஹரிணி, 1,500 மீ., 3,000 மீ., நீளம் தாண்டுதலில் மாணவி இலக்கியா தேவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், 200 மீ., 400மீ., 600மீ., ஓட்டத்தில் ரிதிஷ்குமார் முதலிடம் பிடித்தார்.
தவிர, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 200மீ., 400மீ., 100 மீ., தடை தாண்டுதலில் விமலாதித்யன், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 400மீ., 800மீ., 400 மீ., தடை தாண்டுதலில் மாணவர் தருண்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
முதலிடம் பிடித்தவர்களுக்கு, ஒவ்வொரு போட்டிக்கும் தலா 5 புள்ளிகள் வழங்கப்பட்டன.
வீரர், வீராங்கனைகள் பலர் மூன்று போட்டிகளில் முதலிடம் பிடித்து, பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.