/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அர்ஜூன் சம்பத் மகன் ஜாமின் கேட்டு மீண்டும் மனு
/
அர்ஜூன் சம்பத் மகன் ஜாமின் கேட்டு மீண்டும் மனு
ADDED : நவ 21, 2024 02:42 AM
கோவை:ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
கோவை ஈஷா யோகா மையம் குறித்து, நக்கீரன் இதழில் அவதுாறு பரப்பி வருவதாக கூறி, அதன் ஆசிரியர் கோபாலை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுத்து பேசிய வீடியோ பரவியது.
புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார், ஓம்கார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் விடுவிக்க கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் கோர்ட் 'டிஸ்மிஸ்' செய்தது. இதனால், மீண்டும் ஜாமின் கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.