/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்; நள்ளிரவு முதல் காத்திருந்த இளைஞர்கள்
/
கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்; நள்ளிரவு முதல் காத்திருந்த இளைஞர்கள்
கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்; நள்ளிரவு முதல் காத்திருந்த இளைஞர்கள்
கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்; நள்ளிரவு முதல் காத்திருந்த இளைஞர்கள்
ADDED : நவ 08, 2024 12:31 AM
கோவை ; கோவையில் நடக்கும் ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நேற்று பங்கேற்றனர்.
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் நவ.,4ம் தேதி முதல், 10ம் தேதி வரை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடக்கிறது. காலியாக உள்ள, 174 ராணுவ வீரர்கள் மற்றும் 50 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தேர்வு முகாம் நடத்தப்படுகிறது.
இளைஞர்களுக்கு கயிறு ஏறுதல், ஓட்டப்போட்டிகள், உயரம் தாண்டுதல் போன்றவை நடைபெற்றது. ராணுவ அதிகாரிகள் முகாமில் பங்கேற்ற இளைஞர்களின் எடை, உயரம்அளவீடு செய்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் நவ., 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பங்கேற்றனர். நேற்று, இன்று இரண்டு நாட்கள் தமிழக இளைஞர்களுக்கான தேர்வு நடக்கிறது.
முதல் நாள் தமிழகத்தின் அரியலுார், செங்கல்பட்டு, கடலுார், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராணிபேட்டை, தஞ்சாவூர், திருப்பத்துார், திருவள்ளூர், திருவாரூர், வேலுார், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
ராணுவ தேர்வில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவே இளைஞர்கள் போலீஸ் பயிற்சி மைதானம் முன் குவிந்தனர்.
போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நள்ளிரவு முதலே அவர்களை வரிசையில் அமர வைத்து, முறையாக தேர்வுக்கு அனுப்பி வைத்தனர்.