ADDED : செப் 14, 2026 05:42 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்–கோவை சாலை சிவன்புரத்தில், அற்புதகெபி அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது.
இங்கு கடந்த, 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் மாலையில், சிறப்பு ஜெபமாலை, திருப்பலிகள் நடந்தன. 13ம் தேதி காலை 6 மற்றும் 8 மணிக்கு பாதிரியார்கள் கிங்ஸ்டன் ஆண்டனி, ஜாய் ஜெயசீலன் ஆகியோர் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். மாலை, 5:30 மணிக்கு வட்டார முதன்மை குரு பாதிரியார் விக்டர் பால்ராஜ் தலைமையில், தேர் திருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அன்னையின் தேர், தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, மேட்டுப்பாளையம் சாலை வழியாக, மீனாட்சி பஸ் ஸ்டாப் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் பிரான்சிஸ் ஜெரால்டு மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
