/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலை இலக்கிய போட்டி; மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
கலை இலக்கிய போட்டி; மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : செப் 23, 2025 11:03 PM

கோவை; தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை இணைந்து, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், இப்போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சு, கவிதை, ஓவியம், ஓராள் நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 50 கல்லுாரிகளில் இருந்து 650 மாணவர்கள் பங்கேற்றனர். 20 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் முகமது ரபி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மொழித்துறை தலைவர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.