/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பல்கலையில் கலை விழா
/
அவினாசிலிங்கம் பல்கலையில் கலை விழா
ADDED : செப் 30, 2025 11:01 PM

கோவை; அவினாசிலிங்கம் பல்கலையில், கலை விழா 2025, 'சமகால இந்தியாவுக்கான இந்திய கலாசார விழுமியங்கள்' எனும் கருப்பொருளில் நடந்தது.
தமிழ்நாடு கைவினை மன்றத்தின் பொருளாளர் லட்சுமி ராமச்சந்திரன் பேசுகையில், ''இந்திய கைவினைப்பொருட்கள், ஜவுளிகள் வளமான பாரம்பரியத்தை கொண்டவை. பாரம்பரிய கைவினைகளை, அனைவரும் ஆதரிக்க வேண்டும். இக்கலை வடிவங்களைப் பாதுகாப்பது, எதிர்கால தலைமுறை கைவினைஞர்களை வளர்ப்பதற்கு இன்றியமையாதது,'' என்றார்.
முன்னதாக, பல்கலை மாணவியர் சங்க செயல்பாடுகளின் கண்காட்சியை, பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் துவக்கி வைத்தார். துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநர் வைஷ்ணவி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவியரின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன.