/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் கலைத்திருவிழா; மாணவர்கள் பங்கேற்பு
/
கல்லுாரியில் கலைத்திருவிழா; மாணவர்கள் பங்கேற்பு
ADDED : செப் 19, 2025 08:06 PM

வால்பாறை; வால்பாறை, அரசு கல்லுாரியில் நடைபெறும் கலைத்திருவிழாவில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு உயர்கல்வித்துறை உத்தரவின் பேரில், அரசு கல்லுாரிகளில், கல்லுாரி கலைத்திருவிழா கடந்த, 16ம் தேதி முதல் நடக்கிறது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது.
கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவுக்கு கல்லுாரி முதல்வர் ஜோதிமணி தலைமை வகித்தார். விழாவில் பாடல் வரிகள் எழுதும் போட்டி, வாழ்க்கையின் இசை, வாத்திய இசை நடைபெற்றன. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, ஓவியம், குறும்படம், முப்பரிமாணக்கலை படைப்புக்கள் உருவாக்கும் போட்டிகள் நடந்தது. கலைத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை போராசிரியர்கள் செய்திருந்தனர்.