ADDED : டிச 16, 2024 09:32 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே வாழும் கலை பயிற்சி, இன்று துவங்குகிறது.
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வாழும் கலை பயிற்சி வகுப்பை துவக்கினார். இவரது இந்த பயிற்சி வகுப்புகள், உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், காரமடை அருகே காந்தி நகர் மணிகண்டன் நகரில் ஸ்ரீ ஸ்ரீ ஹவுஸில், இப்பயிற்சியின் அறிமுக உரை நேற்று துவங்கியது.
இன்று (17ம் தேதி)முதல், 22ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. காலையில், 6:00 லிருந்து 8:30 மணி வரையும், 10:00 லிருந்து, 12:30 மணி வரையும், மாலை, 6:00 லிருந்து, இரவு, 8:30 மணி வரையும் என, மூன்று நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் மன அழுத்தத்தை போக்கும் சுதர்சன கிரியா, ஆரோக்கியம் பெற யோகா, பிராணயாமா, தியானம், செயல் திறனை அதிகரிக்க, வாழ்க்கை திறமைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இது அல்லாமல் சக்தி வாய்ந்த எளிய மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 94875 98054, 94875 96206 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை வாழும் கலை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.