/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரையாடுகள் பாதுகாக்க கலை நிகழ்ச்சிகள்
/
வரையாடுகள் பாதுகாக்க கலை நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 18, 2025 10:11 PM
மேட்டுப்பாளையம்; நீலகிரி வரையாடுகளை காப்பது குறித்து, மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அழிந்து வரும் வனவிலங்கு பட்டியலில், வரையாடு இடம் பெற்றுள்ளன. இந்த வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசு, 2023ம் ஆண்டு நீலகிரி வரையாடு திட்டத்தை துவக்கியது.
இத்திட்டத்தின் வாயிலாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும், கலை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பகுதியாக நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமையில், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த அரும்புகள் அறக்கட்டளை கலைக் குழுவினர் வரையாடுகள் பாதுகாப்பது குறித்து, பாட்டு, நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முடிவில் பொது மக்களுக்கு வரையாடுகள் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், நீலகிரி வனச்சரக அலுவலர் செந்தூர் சுந்தரேசன் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.