தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பழைய கட்டடத்தை பலப்படுத்துகிறது

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பழைய கட்டடத்தை பலப்படுத்துகிறது

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பழைய கட்டடத்தை பலப்படுத்துகிறது


UPDATED : பிப் 28, 2026 07:53 AM

ADDED : பிப் 28, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2026 07:53 AM ADDED : பிப் 28, 2026 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகர்ப்புற வளர்ச்சி, நிலச்சரிவுகள், நிலநடுக்கம் மற்றும் பருவமழை போன்ற காரணங்களால் பழைய கட்டடங்கள் பல நேரங்களில் பாதுகாப்பு குறைவு, நிலைத்தன்மை சிக்கல்களை சந்திக்கின்றன. இதற்கு நவீன தொழில்நுட்பங்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் தீர்வு தருகின்றன.

கட்டடத்தின் நிலையை சரியாக மதிப்பிடும் முன் பரிசோதனைகள் அவசியமாகின்றன. இதற்கு கான்கிரீட் தரம், ஸ்டீல் ரீ இன்போர்ஸ்மென்ட் நிலை, கிராக் மற்றும் பிளவுகள் ஆய்வு மற்றும் நிலையாக்கம், வளைவு அளவீடு போன்றவை செய்யப்பட வேண்டும்.



இது எங்கு, எந்த அளவு பலப்படுத்த வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது. பழைய கட்டடங்களில் பில்லர், பீம் மற்றும் இடைத்தளங்கள் பலப்படுத்த, புதிய ஆர்.சி.சி., மற்றும் ஸ்டீல் பிரேஸிங் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் பிரச்னையான பகுதிகளில் உறுதித்தன்மை அதிகரித்து கட்டட பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பழைய பில்லர், பீம்களில் 'கார்பன் பைபர் ஸ்ட்ரிப்' சேர்ப்பதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கட்டடத்தின் சுருங்குதன்மை மற்றும் கடத்தல் திறன் மேம்பட உதவுகிறது.

அதேசமயம் கட்டடத்தின் வெளிப்புற வடிவம் பாதிக்கப்படாது. நிலநடுக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் 'ஷீர் வால்கள்', டாம்பிங் எலிமென்ட் மற்றும் பிரேஸிங் போன்ற நிலநடுக்க எதிர்ப்பு சீரமைப்பு மிகவும் பயனுள்ளதாகும்.

பழைய கட்டடங்களில் உள்ள விரிசல், பிளவுகள் 'எபாக்ஸி இன்ஜெக் ஷன்' வாயிலாக நிரப்பப்படுவதால் கட்டடத்தின் உள் அமைப்பு மீண்டும் வலிமை பெறுகிறது.

குறைந்த தரம் கொண்ட இடங்களில் உயர் திறன் கொண்ட கான்கிரீட் மற்றும் 'ஜியோபாலிமர் காம்போசிட்' பயன்படுத்தி கட்டடத்தின் நிலைத்தன்மை மற்றும் ஆயுள் அதிகரிக்கப்படுகிறது.

இன்று செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.,) மற்றும் இயந்திர தொழில்நுட்பங்களும் கட்டட பராமரிப்பு மற்றும் பலப்படுத்தலில் உறுதுணையாகின்றன. கோவையில் ஒரு பழைய மருத்துவமனை கட்டடத்தில் ஏ.ஐ., கொண்டு விரிசல் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஐ., மற்றும் கணினி தொழில்நுட்பங்களானது கட்டட பராமரிப்பு மற்றும் சீரமைப்பை வேகமாகவும், குறைந்த செலவிலும் துல்லியமாகவும் செய்ய உதவுகின்றன என்கிறார், கோவை மண்டல கட்டட பொறியாளர் சங்க (கொஜினா) நிர்வாகி குமரேசன்.

இன்று செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.,) மற்றும் இயந்திர தொழில்நுட்பங்களும் கட்டட பராமரிப்பு மற்றும் பலப்படுத்தலில் உறுதுணையாகின்றன. கோவையில் ஒரு பழைய மருத்துவமனை கட்டடத்தில் ஏ.ஐ., கொண்டு விரிசல் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us