/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடி போட்டியில் கலைஞர் கல்லுாரி 'கலக்கல்' ; இரண்டாம் இடம் பிடித்த சக்தி இன்ஜி., கல்லுாரி

ADDED : அக் 17, 2024 11:40 PM

கோவை : சுகுணா கல்லுாரியில் நடந்த ஆண்களுக்கான கபடி போட்டியில், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி போட்டிகள்(9வது மண்டலம்), சுகுணா இன்ஜி., கல்லுாரியில் கடந்த இரு நாட்கள் நடந்தன. இதில், 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதல் நாள் ஆறு போட்டிகள் நடந்தன.
தொடர்ந்து, ஏழாவது போட்டியில் சுகுணா கல்லுாரி அணி, 29-14 என்ற புள்ளிக்கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியையும், எட்டாவது போட்டியில் சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 51-15 என்ற புள்ளிக்கணக்கில் ஆர்.வி.எஸ்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வென்றன.
இதையடுத்து நடந்த முதல் அரையிறுதி போட்டியில், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி, 37-13 என்ற புள்ளிக்கணக்கில் பார்க் கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 35-4 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
இறுதிப்போட்டியில், கலைஞர் கருணாநிதி கல்லுாரி அணி, 29-22 என்ற புள்ளிக்கணக்கில் சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பார்க் கல்லுாரி அணி, 31-23 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா கல்லுாரி அணியை வென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் மகுடீஸ்வரன், இயக்குனர் பிரகாசம் பரிசுகள் வழங்கினர்.
உடற்கல்வி இயக்குனர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.