/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஈசனே துணை' நாமம் உச்சரித்தபடி... வெள்ளியங்கிரி மலையேற்றம் துவக்கம்
/
'ஈசனே துணை' நாமம் உச்சரித்தபடி... வெள்ளியங்கிரி மலையேற்றம் துவக்கம்
'ஈசனே துணை' நாமம் உச்சரித்தபடி... வெள்ளியங்கிரி மலையேற்றம் துவக்கம்
'ஈசனே துணை' நாமம் உச்சரித்தபடி... வெள்ளியங்கிரி மலையேற்றம் துவக்கம்
ADDED : பிப் 02, 2025 01:26 AM

தொண்டாமுத்தூர: வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததை தொடர்ந்து, நேற்று முதல் பக்தர்கள் மலையேற துவங்கினர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள, தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.
இந்தாண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்தனர்.
இதனையடுத்து, நேற்றுமுன்தினம் மாலை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், இந்தாண்டு மலையேறும் பக்தர்களுக்கு, எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என, சாதுக்கள், படி பூஜை செய்தனர்.
தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு, வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதையின் கேட்டை, போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் திறந்து வைத்தார். இதனையடுத்து, நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மலையேற துவங்கினர்.
கோவில் நிர்வாகம் சார்பில், அடிவாரத்தில் உள்ள கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில், பக்தர்களுக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளனர். சுகாதாரத்துறையினர், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, மருத்துவ முகாம் அமைத்துள்ளனர். நேற்று, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.