/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடற்பயிற்சி செய்ய வேண்டும்: ஆசிய விளையாட்டு வீரர் பேச்சு
/
உடற்பயிற்சி செய்ய வேண்டும்: ஆசிய விளையாட்டு வீரர் பேச்சு
உடற்பயிற்சி செய்ய வேண்டும்: ஆசிய விளையாட்டு வீரர் பேச்சு
உடற்பயிற்சி செய்ய வேண்டும்: ஆசிய விளையாட்டு வீரர் பேச்சு
ADDED : நவ 20, 2025 05:21 AM

மேட்டுப்பாளையம்: திண்டுக்கல் காந்திகிராம பல்கலையின் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் சுப்பையா, 84. இவர் திண்டுக்கல் மாவட்ட வாலிபால் அசோசியேசன் செயலாளராகவும், தமிழ்நாடு அமெச்சூர் அத்லெட்டிக் அசோசியேசன் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு கபடி அசோசியேசன் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் 84 வயதிலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
சென்னையில் ஆசிய அளவிலான மூத்தோருக்கான தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் குண்டு எறிதல் போட்டியிலும், 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் சுப்பையா தங்கப்பதக்கம் வென்றார். மேலும் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
இவருக்கு மேட்டுப்பாளையம் சூர்யா மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடந்தது. மருத்துவமனை தலைமை டாக்டர் சுதாகர் வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், டாக்டர் புவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கப்பதக்கங்களை பெற்ற சுப்பையா பேசுகையில், விளையாட்டில் சாதிக்க வயது ஒருபோதும் தடையில்லை. இன்றைய இளைஞர்கள் மொபைல் போன் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். தேவைக்கு ஏற்றார் போல், மொபைல் போன் பார்க்க வேண்டும். தினமும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், விளையாட்டில் பல சாதனைகளை சாதிக்க முடியும், என்றார்.
விழாவில் குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுணா, கோவை அமெச்சூர் அத்லெட்டிக் அசோசியேசன் பயிற்றுநர்கள் நந்தகுமார், ராஜேஷ் உள்பட பல பாராட்டினர். விளையாட்டு பயிற்றுநர் ஜெயபாண்டியன் நன்றி கூறினார்.

