/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
6 பயிர்களின் விதை இருப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு
/
6 பயிர்களின் விதை இருப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு
6 பயிர்களின் விதை இருப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு
6 பயிர்களின் விதை இருப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு
ADDED : டிச 09, 2024 07:49 AM
ஆனைமலை : ஆனைமலை வேளாண் அலுவலகத்தில், நெல், சோளம், கம்பு, தட்டை உள்ளிட்ட ஆறு வகையான பயிர்களின் விதை ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
நெல், சோளம், கம்பு, தட்டை, நிலக்கடலை, எள் ஆகிய ஆறு வகையான பயிர்களுக்குரிய அரசு விதைப்பரிசோதனை நிலையத்தால், தரமானது என சான்றளிக்கப்பட்ட, 12 வகையான ரகங்கள், ஆனைமலை, கோட்டூர் வேளாண் விரிவாக்க மையங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நெல் (துாய மல்லி, கருப்பு கவுனி) 300 கிலோ, கோ - 51 நெல், 11 டன்னும், சோளத்தில், கோ - 32, கே - 12 ரகங்கள், 1,500 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளன.தட்டை பயிரில், விபிஎன் - 3, ரகமும்; கம்பில், கோ - 10, தனசக்தி, 750 கிலோவும்; எள்ளில், வி.ஆர்.ஐ., - 4 ரகம், 100 கிலோ விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களில் அறிவிக்கப்பட்ட மானியத்துடன், குறைந்த விற்பனை விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.அனைத்து விதைக் குவியல்களும் ஜூன் மாதம், 2025ம் ஆண்டு வரை உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும் தன்மையுடையது.
ஆதார விதைப்பண்ணை அமைத்து, சான்று நிலை விதை உற்பத்தி செய்து வேளாண் துறைக்கே மீண்டும் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்கப்படுத்த, கொள்முதல் விலையுடன் அரசு நெல் கிலோவுக்கு, எட்டு ரூபாயும், சோளம், கம்பு, தட்டை, எள், நிலக்கடலை குவியல்களுக்கு, கிலோ, 25 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு ஆனைமலை வேளாண் வட்டார அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.