ADDED : ஜன 14, 2026 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட காசநோய் அலுவலகத்தில் நேற்று, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பணியாளர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வாச லில் வண்ண கோலமிட்டு,
புதுப்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி, களப்பணியாளர்களும் கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின், காசநோய் மாவட்ட அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதால் பணியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி, அலுவலர்கள் ரவி, பொன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

