/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: வனத்துறை அனுமதி
/
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: வனத்துறை அனுமதி
ADDED : செப் 30, 2024 04:56 AM

வால்பாறை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு வருகின்றனர். அதிரப்பள்ளியில் மூன்று மாதங்களாக பெய்த கனமழையால், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் இரு மாநில சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர்.
கேரளாவில், சில நாட்களாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் இங்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இதனால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.