ADDED : செப் 27, 2026 07:23 PM
பெ.நா.பாளையம், செப். 28-–
சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் சி.எம்.கே., திருமண மண்டபத்தில் அட்மா திட்ட பயிற்சி முகாம் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு அரசு வேளாண்துறை சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் சி.எம்.கே., திருமண மண்டபத்தில், ஒரே நேரத்தில் பல பயிர்களை வளர்க்கும் நடைமுறைகளை பற்றி அட்மா திட்ட பயிற்சி முகாம் இன்று திங்கட்கிழமை நடக்கிறது.
இம்முகாமுக்கு நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் வருகிறது. தடாகம் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் தங்களின் தோட்டத்தில் உள்ள மண் மற்றும் நீர் எடுத்து வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். மண் மற்றும் நீர் மாதிரி பரிசோதனைக்கு தலா, 30 ரூபாய் விதம் கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
