UPDATED : ஆக 05, 2026 10:30 PM
ADDED : ஆக 05, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆழியாறு அருகே, வால்பாறை ரோட்டில் யானைகள் கூட்டமாக பயணிக்கின்றன. அதில் சமமட்ட கால்வாய் அருகே, ரோட்டின் ஓரமாக யானை ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தது. இதை கண்ட அவ்வழியாக வாகனத்தில் சென்றவர், யானையின் அருகே சென்று காட்டுக்குள் செல்லுமாறு மிரட்டுகிறார். கல் வீசி தாக்குவது போல கைகளை உயர்த்தி பாவனை செய்ததை கண்ட யானை, ஆக்ரோஷத்தில் பிளிறி, அவரை தாக்க முயன்றது.
அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணியர், அவரை காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இதை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலாகியுள்ளது. அந்த நபர், குடி போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. யானைகளுக்கு தொல்லை கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
