/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமியை கொல்ல முயற்சி; வாலிபரை தேடும் போலீசார்
/
சிறுமியை கொல்ல முயற்சி; வாலிபரை தேடும் போலீசார்
ADDED : செப் 30, 2025 10:59 PM
கோவை; கோவை, சிவில் ஏரோடிராம், பூங்கா நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி சரஸ்வதி,34, ஸ்வீட் கடையில் பணியாற்றுகிறார். அதே கடையில், தஞ்சாவூரை சேர்ந்த லோகேஷ் சரவணன்,25, பணியாற்றினார்.
இவர், கடையில் உள்ள மற்ற பணியாளர்களிடம் அடிக்கடி கடன் கேட்டு தொந்தரவு செய்ததால், நான்கு மாதத்துக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர், கடையில் வேலை செய்தபோது, சரஸ்வதியிடம் கடன் வாங்கினார்.
வேலையை வீட்டு நீக்கிய பிறகும், மொபைல் போனில் சரஸ்வதியிடம் தொடர்புகொண்டு கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். லோகேஷ் சரவணன் மொபைல் எண்ணை, சரஸ்வதி 'பிளாக்' செய்தார்.
நேற்று முன்தினம், சரஸ்வதி வீட்டுக்குச் சென்ற லோகேஷ் சரவணன், காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தார். சரஸ்வதி வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டில் இருந்த சரஸ்வதியின், 16 வயது மகள் கூச்சலிட்டு, லோகேஷ் சரவணனை தடுத்தார்.
அச்சிறுமி கழுத்தில், 'ஸ்குரூ டிரைவரால்' சரமாரியாக குத்தினார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். படுகாயம் அடைந்த சிறுமியை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பீளமேடு போலீசார், லோகேஷ் சரவணனை தேடி வருகின்றனர்.