/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்நுகர்வோர் கவனத்துக்கு... வங்கி கணக்கு பெயர் மாற்றம்
/
மின்நுகர்வோர் கவனத்துக்கு... வங்கி கணக்கு பெயர் மாற்றம்
மின்நுகர்வோர் கவனத்துக்கு... வங்கி கணக்கு பெயர் மாற்றம்
மின்நுகர்வோர் கவனத்துக்கு... வங்கி கணக்கு பெயர் மாற்றம்
ADDED : செப் 30, 2025 10:16 PM
பொள்ளாச்சி:
மின்நுகர்வோர் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட வங்கி பதிவின்படி, காசோலை மற்றும் வரைவோலை பண பரிவர்த்தனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வாரியம், பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் ராஜா அறிக்கை:
உடுமலை மின்பகிர்மான வட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வங்கி கணக்குகள், 11103894295- எஸ்.பி.ஐ., பொள்ளாச்சி மற்றும் 61333070000603 கனரா வங்கி அணிக்கடவு, 'Superintending Engineer / UEDC/ TANGEDCO / Udumalpet' என பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த வங்கி கணக்கு பதிவில் பெயர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 'SUPER INTENDING EN GINEER / UEDC/TN PDCL/UDUMALPET' என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, டி.கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம், பொள்ளாச்சி நகரம், ஜோதிநகர், முத்துார், ஏரிப்பட்டி, பெதப்பம்பட்டி, வீ.வேலுார், ராமசந்திராபுரம் மற்றும் கொங்கல்நகரம் உதவி மின்பொறியாளர் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள், வங்கி கணக்குகளில் காசோலை மற்றும் வரைவோலை பண பரிவர்த்தனை செய்ய இந்த பதிவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.