/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு கூட்டமைப்பு மாநாடு; 60 ஆயிரம் சதுர அடியில் பந்தல்
/
அத்திக்கடவு கூட்டமைப்பு மாநாடு; 60 ஆயிரம் சதுர அடியில் பந்தல்
அத்திக்கடவு கூட்டமைப்பு மாநாடு; 60 ஆயிரம் சதுர அடியில் பந்தல்
அத்திக்கடவு கூட்டமைப்பு மாநாடு; 60 ஆயிரம் சதுர அடியில் பந்தல்
ADDED : பிப் 07, 2025 10:14 PM

அன்னுார்; அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில், நாளை (9ம் தேதி) நடைபெற உள்ள பாராட்டு விழா மாநாட்டுக்கு, 60 ஆயிரம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை துவக்கி, நிறைவேற்றிய, முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு, அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் மூன்று மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா மாநாடு நாளை (9ம் தேதி) மதியம் 3:00 மணிக்கு அன்னூர் அருகே கஞ்சப் பள்ளியில் நடக்கிறது.
இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கம்பத்தாட்டம், வள்ளி கும்மியாட்டம் நடைபெறுகிறது.
மாநாட்டுக்காக 15 ஏக்கர் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 20 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டில், விவசாயிகள், பொதுமக்கள் அமர்வதற்காக 60 ஆயிரம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேடை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஏற்பாடுகள் குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்,' 50,000 பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். குடிநீர், கழிப்பறை, மதிய உணவு, வாகனங்களை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள், பாதுகாவலர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
60 ஆண்டு கால போராட்ட வரலாறு மாநாட்டில் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தனபால் ஆகியோர் பங்கேற்கின்றனர்,' என்றனர்.