UPDATED : நவ 26, 2026 07:38 PM
ADDED : நவ 26, 2026 07:38 PM
மேட்டுப்பாளையம்: காரமடை சிறுமுகை சாலையில், சாஸ்திரி நகரில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு நடந்த ஏலத்திற்கு, 73 குவிண்டால் பாக்கு மூட்டைகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பாக்கு ஏலத்தில், ஒரு கிலோ வரப்பாக்கு குறைந்தபட்ச விலை, 170 ரூபாய்க்கும், அதிகபட்ச விலை, 190 ரூபாய்க்கு ஏலம் போனது.
பழப்பாக்கு குறைந்த பட்சம், 55க்கும், அதிகபட்சம், 70 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ உரித்த ராசி ரகம் பாக்கு, குறைந்த விலை, 350 ரூபாய்க்கும், அதிக விலை, 380 ரூபாய்க்கும் ஏலம் போனது. பாக்கு மொத்தம், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. பாக்கு ஏலம் முடிந்தவுடன் கணக்குகள் சரிபார்த்த பின், அந்தந்த விவசாயிகள் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் பாக்கு ஏலம் குறித்து விபரங்கள் தெரிந்து கொள்ள, 9659242424, 6380364804 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளும்படி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்தார்.
