/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டணம் வசூலிக்க நடந்த ஏலம் ரத்து
/
கட்டணம் வசூலிக்க நடந்த ஏலம் ரத்து
ADDED : மே 02, 2025 09:16 PM
அன்னுார்; அன்னுார் பேரூராட்சி வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னுார், பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான பொது ஏலம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆனது.
இதையடுத்து, கடந்த 28ம் தேதி நடந்த ஏலத்தில் ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் 11 மாதத்திற்கு பணம் செலுத்தி சந்திரமோகன் என்பவர் ஏலம் எடுத்தார்.
இந்நிலையில் மறுநாள் மற்றொருவர் அதிலிருந்து 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்துவதாக கூறி, ஒரு மாதத்திற்கு இரண்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வீதம், கணக்கிட்டு 11 மாதத்திற்கு முன் பணம் செலுத்தினார்.
இதையடுத்து, இருசக்கர வாகன ஸ்டாண்டுக்கு மறு ஏலம் நடைபெறும் என பேரூராட்சி அறிவித்துள்ளது. மறுஏலம் நடந்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும் வரை, பேரூராட்சி ஊழியர்களே இரு சக்கர வாகன ஸ்டாண்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பார்கள் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

