/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆலை துவங்க கோவையில் ஆய்வு செய்த ஆஸி., நிறுவனம்
/
ஆலை துவங்க கோவையில் ஆய்வு செய்த ஆஸி., நிறுவனம்
ADDED : நவ 17, 2025 01:41 AM
கோவை: ஆஸி.,யைச் சேர்ந்த வேர்ல்டு வைல்டு நிறுவனம் 'ஸ்பைக் கன்ட்ரோல்' உபகரணங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் சிறிய அளவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க முன்வந்துள்ளது. இதற்காக, கோவையில் பல்வேறு நிறுவனங்களைச் சந்தித்து ஆலோசித்துள்ளது.
'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “ஆஸி.,யின் வேர்ல்டு வைல்டு நிறுவனம் சிறிய நிறுவனம்தான். அவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உற்பத்தி ஆலை தொடங்க வாய்ப்புகளை ஆராய்ந்தனர்.
கோவையிலும் சில நிறுவனங்களோடு கலந்து பேசியுள்ளனர். தமிழக அரசின் வழிகாட்டுதலுடன், கோவையில் ஆய்வு செய்தனர். கொடிசியா நிர்வாகிகளையும் சந்தித்தனர். இன்னும் இறுதி செய்யவில்லை,” என்றார்.
இச்சந்திப்பின்போது, வேர்ல்டு வைடு நிறுவன ஆராய்ச்சிப்பிரிவு இயக்குநர் வெய்ன் காலென், மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் புரூக் லவ், கொடிசியா செயலர் யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

