/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ டிரைவருக்கு விழுந்தது கத்திக்குத்து
/
ஆட்டோ டிரைவருக்கு விழுந்தது கத்திக்குத்து
ADDED : ஜன 05, 2026 05:17 AM
துடியலூர்: துடியலூர், ரங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 40; ஆட்டோ டிரைவர். இவருக்கும், அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்த சந்திர பிரகாஷ், 40 என்பவருக்கும் 6 மாதத்துக்கு முன் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மகேஷ்குமார், துடியலுார் சந்திப்பு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில், நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரபிரகாஷ் குடிபோதையில், மகேஷ் குமாரிடம் தகராறு செய்தார்.
வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென சந்திரபிரகாஷ் கத்தியை எடுத்து மகேஷ்குமார் வயிற்றில் குத்தினார். மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அங்கு வந்தனர். சந்திரபிரகாஷ் தப்பினார். மகேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

