UPDATED : நவ 22, 2026 10:16 PM
ADDED : நவ 22, 2026 10:16 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் பிரிவு அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோலை சேமித்து வைக்க கட்டப்பட்ட தரைமட்ட தொட்டியில் குழாய் இணைப்புகள் உள்ளன. அவற்றின் மேல் பகுதியில் உள்ள இரு இடங்கள் இரும்பிலான மூடியால் மூடப்பட்டு இருந்தது.
தொட்டியின் ஒரு பக்க மூடியை திறந்து குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டன. அப்போது தொட்டியின் இன்னொரு பகுதியில் உள்ள மூடி அழுத்தம் தாங்காமல் கழன்று பறந்து பெட்ரோல் அடிக்க நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கன்னிமுத்து,42 மீது விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
