/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தானியங்கி ஓட்டுனர் தேர்வு மையம் தயார்
/
தானியங்கி ஓட்டுனர் தேர்வு மையம் தயார்
ADDED : ஜன 25, 2026 05:42 AM

கோவை: மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தானியங்கி ஓட்டுனர் தேர்வு மையம் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இம்மாதி இறுதியில் அல்லது பிப்., முதல் வாரத்தில் இம்மையம் பயன்பாட்டு வரும் எனத் தெரிகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மார்த்தாண்டம், திருநெல்வேலி, கோவை(மத்தியம்), மதுரை(வடக்கு), துாத்துக்குடி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சிவகங்கை, திருச்சி(மேற்கு) ஆகிய, 10 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுனர் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இம்மையம் செயல்பாட்டுக்கு வந்தால், முறைகேடுகள் தவிர்க்கப்படும். தேர்வுக்கு செல்லும் முன் விண்ணப்பதாரரின் புகைப்படம் எடுக்கப்படும். முகம் சிறிது மாறினாலும், தேர்வில் தோல்வி அடைவர். ஒவ்வொரு கட்டத்திலும், மதிப்பெண் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்' என்றார்.

