/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒழுக்கம் இல்லாதவரின் நட்பை ஒதுக்கி விடுங்கள்'
/
'ஒழுக்கம் இல்லாதவரின் நட்பை ஒதுக்கி விடுங்கள்'
ADDED : செப் 01, 2025 10:27 PM
கோவை; கோவை முத்தமிழ் அரங்கத்தின் வாராந்திர இலக்கிய சந்திப்பு கூட்டம், ரேஸ்கோர்ஸ் நடைபாதை சதுக்கத்தில் நடந்தது. அமைப்பின் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். புலவர் ஆறுமுகம், நாலடியார் குறித்து உரையாற்றினார். கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர்.
முத்தமிழ் அரங்க தலைவர் ராமசாமி பேசுகையில், ''அன்பு என்ற சொல் என்றும் நிலையானது. அன்பு வைத்திருப்போரிடம் மட்டுமே மகிழ்ச்சியைப் பகிர்கிறோம். அன்பை பகிர்ந்து கொள்ளாதவர் இருந்தும் பயனில்லாதவர் என்கிறார் வள்ளுவர்.
சமூகப் பணிகளில் எல்லாப் பணிகளுமே உயர்ந்ததே. வேண்டாத ஒன்றை கடல் அலைகள் கரையில் ஒதுக்கி விடுவதுபோல், ஒழுக்கம் அற்றவரின் நட்பை அறவே ஒதுக்கி விடுவது நல்லது. இதுவே வள்ளுவர் காட்டும் நல்வழி,'' என்றார்.