/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அவசியம் சர்க்கரை பாதிப்பை தடுக்க அறிவுரை
/
உணவு, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அவசியம் சர்க்கரை பாதிப்பை தடுக்க அறிவுரை
உணவு, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அவசியம் சர்க்கரை பாதிப்பை தடுக்க அறிவுரை
உணவு, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அவசியம் சர்க்கரை பாதிப்பை தடுக்க அறிவுரை
ADDED : நவ 14, 2024 05:00 AM
அறுசுவை உணவுகளையும் தலைவாழை இலையில் பரிமாறி பசியாற செய்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று இந்தக் காட்சிகள் எல்லாம், சித்திரங்களில் பார்க்கக்கூடிய ஒன்றாக மாறி வருகின்றன.
'சில்லு', 'நொண்டி', 'பச்சைக்குதிரை' இப்படி வாழ்வியலில் ஒன்றிப் போன விளையாட்டுகளை மறந்து, வீடியோ கேம்களிலும், மொபைல்போன்களிலும் நகரும் அட்டைப்பூச்சிகளாக மாறிய குழந்தைகள் துவங்கி அனைவரையும் ஆட்கொண்டுள்ளது சர்க்கரை.
இன்று பள்ளிக் குழந்தைகளின் உணவுப் பைகள், இன்சுலின் மருந்துகள் சுமக்கும் மூட்டைகளாக மாறியுள்ன. 'டயாபடீஸ்' எனும் சர்க்கரை பாதிப்பு நோய் அல்ல. இன்சுலின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு என்கிறார்கள் மருத்துவர்கள். உடலளவிலும், மனதளவிலும் மனித உயிர்களை வதைத்துக்கொண்டிருக்கும் இந்த குறைபாடு குறித்த பல்வேறு மருத்துவ ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன.
இளம்வயதினரையும் பாதிப்புக்குள்ளாக்கும், சர்க்கரை நோய் குறித்து ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டியது அவசியம். நகர் புறங்களில் ஐந்து பேருக்கு ஒருவர், கிராமப்புறங்களில், 10 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சர்க்கரை நோய் உள்ளது.
இது வருங்காலத்தில் அதிகரிக்கவே செய்யும். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சியின்மை ஆகிய இரு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்து பணிகளையும் தாமாகவே செய்த காலம் மாறி அனைத்தும் நம் காலடியில் கிடைக்கும் நிலை உள்ளது. உணவு, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சர்க்கரை பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

