/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைபர் பாதுகாப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
/
சைபர் பாதுகாப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 23, 2024 08:58 PM

கோவை;ரோட்டரி 3201 மாவட்டம் சார்பில், சைபர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'சைபர் சாம்பியன்ஸ்' எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தொட்டிபாளையம், டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த இதன் துவக்க நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் சுந்தர வடிவேலு பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''இளம் வயதினர், சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து, அறிந்து கொள்வது அவசியம்,'' என்றார்.
மத்திய காவல் ஆயுத படை முதன்மை ஆய்வாளர் விஜயகுமார், ஐ எக்ஸ்ப்ளோர் பவுண்டேசனை சேர்ந்த ராமலதா ஆகியோர், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது உட்பட பல்வேறு தகவல்களை வழங்கினர்.
ரோட்டரி நிர்வாகிகள் பிரபு சங்கர், நவநீத கிருஷ்ணன், ஜெயகாந்தன், டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளியின் தாளாளர் நிரஞ்சனி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

