தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பை யை தரம் பிரிக்க பள்ளியில் விழிப்புணர்வு

குப்பை யை தரம் பிரிக்க பள்ளியில் விழிப்புணர்வு

குப்பை யை தரம் பிரிக்க பள்ளியில் விழிப்புணர்வு


UPDATED : நவ 19, 2026 07:09 PM

ADDED : நவ 19, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:09 PM ADDED : நவ 19, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொடக்கப்பள்ளியில், மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரஷியாபீபி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் சாகுல் ஹமீது, ஊராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்று, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், இலைகள் போன்றவற்றை ஒரு தொட்டியிலும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்றவற்றை மற்றொரு தொட்டியிலும் போட வேண்டும், என, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், வீட்டையும், பள்ளியையும், ஊரையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us