sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புதிய குற்றவியல் சட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு

/

 புதிய குற்றவியல் சட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு

 புதிய குற்றவியல் சட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு

 புதிய குற்றவியல் சட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு


ADDED : பிப் 21, 2026 07:51 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான 'பாரதிய நியாய சன்ஹிதா' வில் முக்கிய ஷரத்துகளை மாணவ, மாணவியர் அறிந்துகொள்ளும் நோக்கில், பள்ளிகள் தோறும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவில், திருப்பூரில் உள்ள பள்ளிகளில், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'பாரதிய நியாய சன்ஹிதா' குறித்த விளக்க கருத்தரங்கும் நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். திருமுருகன்பூண்டி எஸ்.ஐ. குணசேகரன் பேசுகையில், ''ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வர விருப்பம் உள்ளவர்கள், இப்போதிருந்தே அதற்கான கல்வியை கற்க வேண்டும். கற்பதை தள்ளிப்போட்டால் கனவு நிறைவேறாது.

தற்போதைய சூழலில், 12 முதல், 19 வயது வரையுள்ளவர்களின் மனது அலைபாயும் வயதாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். செய்வதெல்லாம் சரி என நினைத்து, தேவையில்லாத செயலை செய்து மாட்டிக்கொள்கின்றனர்.

ஆசிரியர்கள் திட்டுவது என்பது, திருத்துவதற்கு தான் என்பதை முதலில் உணர வேண்டும். செய்யும் தவறுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பின், குற்றவியல் சட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us