தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பையை கையாள விழிப்புணர்வு தேவை: திடக்கழிவு மேலாண்மையில் சிக்கல்

குப்பையை கையாள விழிப்புணர்வு தேவை: திடக்கழிவு மேலாண்மையில் சிக்கல்

குப்பையை கையாள விழிப்புணர்வு தேவை: திடக்கழிவு மேலாண்மையில் சிக்கல்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை நகராட்சியில், குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பை தரம் பிரித்து அளிக்காததால், துாய்மை பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் சென்று, துாய்மைப்பணியாளர்கள் குப்பை சேகரித்து, நுண் உரக்குடில் வாயிலாக உரமாக மாற்றுவது, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை முறையாக அழிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, நகராட்சி சார்பில், வீடுகள், வணிக நிறுவனங்களிடம், சொத்து வரிக்கு ஏற்ப, ஆண்டுக்கு, 120 முதல், 600 ரூபாய் வரை சேவை வரி வசூலிக்கப்படுகிறது.

ஆனால், குப்பையை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுதப்படும் நிலையில், பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்குவதில்லை.

பிளாஸ்டிக் கழிவு, உணவு கழிவு, அபாயகரமான கழிவு என அனைத்தையும் ஒரே கழிவாக, துாய்மை பணியாளர்களிடம் வழங்குவதால், அவற்றை தரம் பிரிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. மேலும், பொது இடங்களில் கழிவுகளை கொட்டும் வழக்கமும் தொடர்கிறது.

இதனால், நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாவதோடு, சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் வெளியேற்றப்படும் கழிவுகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

துாய்மை பணியாளர் ஒருவர் கூறுகையில், 'வீடுகளில் இருந்து கழிவுகளை மொத்தமாக கொடுக்கின்றனர். அவற்றை தரம் பிரித்து கையாள்வது சிரமமாக உள்ளது. இதை தவிர்க்க, குப்பையை கையாள வீடு தோறும் பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், திட்டத்தை செயல்படுத்த முடியும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us