/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை வழிபாடு
/
அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை வழிபாடு
ADDED : அக் 02, 2025 12:11 AM

பொள்ளாச்சி; அரசு அலுவலகங்களில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டன. இதற்காக, நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், கழுவி சுத்தம் செய்யப்பட்டு அந்தந்த அலுவலகத்தில் நிறுத்தி பூஜை நடந்தது.
பொள்ளாச்சி நகராட்சியில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதில், வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன. நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன், கமிஷனர் குமரன் மற்றும் நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், தி.மு.க. வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
* வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. துாய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர்(பொ) குமரன், பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு எஸ்டேட்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
* கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மோகன்பாபு மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
* ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் நடந்த விழாவில், பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, துணைத்தலைவர் சையது அபுதாகீர், செயல் அலுவலர் மங்களேஸ்வரர் பங்கேற்றனர். துாய்மை பணிக்கான வாகனங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது.
* இதே போன்று, பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு, துாய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது.