/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஸ்த்துடன் திரியும் பாகுபலி யானை; பொது மக்களுக்கு எச்சரிக்கை
/
மஸ்த்துடன் திரியும் பாகுபலி யானை; பொது மக்களுக்கு எச்சரிக்கை
மஸ்த்துடன் திரியும் பாகுபலி யானை; பொது மக்களுக்கு எச்சரிக்கை
மஸ்த்துடன் திரியும் பாகுபலி யானை; பொது மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : டிச 24, 2024 06:57 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மஸ்த்துடன் சுற்றித் திரியும் பாகுபலி யானையை கண்டால், அருகில் யாரும் செல்லக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், சமயபுரம், நெல்லித்துறை, சிறுமுகை, லிங்காபுரம், கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பாகுபலி யானை உலா வருகிறது. அதேபோல் அவ்வப்போது குன்னூர் சாலையில் கல்லாறு அருகே முகாமிடுகிறது.
இதையடுத்து, பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க மேட்டுப்பாளையம் வனத்துறையினர் குழு அமைத்து 24 மணி நேரம் மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், பாகுபலி யானை மஸ்த்துடன் உள்ளதால் யானை அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், 'பாகுபலி யானை மஸ்த்துடன் சுற்றி திரிவதால் யானையைக் கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அருகில் யாரும் செல்லக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது, மஸ்துடன் ஆக்ரோஷமாக பாகுபலி சுற்றி திரிகிறது. எனவே பொதுமக்கள் கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், பயணிக்க வேண்டும்' என்றனர்.