/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டி யானை பத்திரமாக மீட்பு
/
குட்டி யானை பத்திரமாக மீட்பு
ADDED : ஜன 19, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு, எட்டிமடை சுற்றுக்குட்பட்ட போளுவாம்பட்டி பிளாக் 1 காப்புக்காடு, மட்டத்துக்காடு சரகத்தில் கடந்த மாதம் யானையின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டது. வன பணியாளர்கள் தேடுதலில், வனவிலங்கு, தண்ணீர் தொட்டி அருகே சுமார் மூன்று மாத குட்டி ஆண் யானை, தனியே இருப்பது தெரிந்தது.
குட்டியை தாயுடன் சேர்க்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குட்டியின் உடல்நலனை கருத்தில் கொண்டு, வன உயிரின பாதுகாவலரின் ஆலோசனையில், பொள்ளாச்சி வன கோட்டம், உலாந்தி வன சரகத்திலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில், குட்டி யானை ஒப்படைக்கப்பட்டது.

