/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் அருகே பெண் சிசு மீட்பு
/
சூலுார் அருகே பெண் சிசு மீட்பு
ADDED : நவ 11, 2025 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சூலுார் அருகே ரோட்டில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன, பெண் சிசுவை போலீசார் மீட்டனர்.
சூலுார் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு உயிருடன் கிடப்பதாக, சூலூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பெண் சிசுவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை அதிகாலை நேரத்தில் ரோட்டில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

